ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை இன்று (18) தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் குழுவிற்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாதுகாப்புப் பணியில் பொலிஸார்
தற்போது மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறியதையடுத்து பல்கலைக்கழகத்தைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் அமைதியின்மைக்கு தீர்வு காணும் வரை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.