தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலத்தை இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தபால் கட்டளைச் சட்டத்தை உடனடியாக திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பணிகள் ஏற்கனவே 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“நிலையான நாட்டை நோக்கி – அனைத்தும் ஒரே திசையில்” என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.