அதிகரிக்கப்படும் நீர் கட்டணம்!

நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டண அதிகரிபப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாரம் வர்த்த்மாஇதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடக் கூடும் என நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது வீட்டுப்பாவனைக்காக அறவிடப்படுகின்ற நீர் கட்டணத்தை 60 முதல் 70 சதவீதம் வரையில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வணிக ரீதியான நீர் விநியோகத்துக்கு அறவிடப்படும் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய தற்போது அறவிடப்படும் சேவை கட்டணத்தை 50 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக 2012ஆம் ஆண்டு நீர் கட்டணம் திருத்தப்பட்டது. இதன்படி, கடந்த 10 ஆண்டுகளாக நீர் உற்பத்திகேகான செலவு அதிகரித்துள்ளமையை கருத்திற் கொண்டு இவ்வாறு கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. னி அறிவிப்பு வெளியிடக்கூடும்..

Recommended For You

About the Author: webeditor