நாட்டில் இருதய அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் 2,000 பேர்

இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.

சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டு நிறைவடையும் நடவடிக்கை

மருத்துவ ஊழியர்கள் குழாம் இதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், பௌதீக வளங்கள் பற்றாக்குறையினால் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளது.

இதற்கான தீர்வாக 11 மாடிகளைக் கொண்ட சிறுவர் இதய நோய் பிரிவொன்றை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியர் விஜேசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor