வெந்தயம் பல்வேறு சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை தினமும் சாப்பிட்டால் உடல் சூடு குறையும் என்று கூறப்படுகிறது.
ஊற வைத்த வெந்தயத்தை உட்கொள்வதால் இத்தனை நன்மைகளா? | So Many Benefits Of Soaked Fenugreek Seeds
செரிமானம் மேம்படும்
வெந்தயம் ஒரு நேச்சுரல் ஆன்டாசிட். இதை உட்கொள்ளும் போது அசிடிட்டி, வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
அதுவும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அந்த நீருடன் வெந்தயத்தை உட்கொள்ளும் போது இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
ஊற வைத்த வெந்தயத்தை உட்கொள்வதால் இத்தனை நன்மைகளா? | So Many Benefits Of Soaked Fenugreek Seeds
கொலஸ்ட்ரால் கட்டுப்படும்
தற்போது கொலஸ்ட்ரால் பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தாவிட்டால், அது மாரடைப்பு போன்ற இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
இந்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வெந்தயம் பெரிதும் உதவி புரியும். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அந்த நீருடன் உட்கொள்ள வேண்டும்.
இதனால் வெந்தயத்தில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இதை உட்கொண்டு வந்தால் நிச்சயம் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஊற வைத்த வெந்தயத்தை உட்கொள்வதால் இத்தனை நன்மைகளா? | So Many Benefits Of Soaked Fenugreek Seeds
மாதவிடாய் கால வலி குறையும்
பெண்கள் தினமும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, அந்த நீருடன் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும்.
பிடிப்புகள் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பல ஆய்வுகளில் வெந்தய நீரில் உள்ள அல்கலாய்டுகள் மாதவிடாய் கால வலியைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது.
ஊற வைத்த வெந்தயத்தை உட்கொள்வதால் இத்தனை நன்மைகளா? | So Many Benefits Of Soaked Fenugreek Seeds
எடை இழப்புக்கு உதவும்
தற்போது பலரது கவலைகளுள் ஒன்றாக உடல் பருமன் உள்ளது.
உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியானால் வெந்தயத்தை தினமும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, உடலில் வெப்பத்தை உருவாக்கி, எடை இழக்கும் செயல்முறையை வேகப்படுத்தும்.