இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுரக்ஷா’ காப்புறுதி முறையை 2024ஆம் ஆண்டு மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
‘சுரக்ஷா’ காப்புறுதி முறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது தற்போதைய ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காப்புறுதி முறையானது கடந்த கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் போது இடைநிறுத்தப்பட்டது.
எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த காப்புறுதி முறை எதிர்வரும் வருடம் முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.