மீனவர்கள் படும் கஸ்ரங்களை நிவர்த்திசெய்வதற்காக நாம் பல்வேறு நிறுவனங்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் அண்மையில் ஒரு நிறுவனம் வடமராட்சி வடக்கு பகுதியில் கடற்கரையில் படகு கட்டும் துறைகளை தூர் வார்வதற்க்காக சுமார் ஒரு கோடி நிதியினை வழங்க முன்வந்ததாகவும் யாழ் மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம் ஒழுங்கற்றிருந்ததனால் அப்பணத்தினை பெற்று தூரதவாரும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்தாவது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் நிறுவனம் ஒன்றுடன் இடம் பெற்ற கலந்துரையாடலில் வடமராட்சியிலுள்ள 25 படகு பாதுகாப்பாக கட்டும் வான்கள் தூர் வாருவதற்க்காகவே குறித்த நிதி கிடைக்க இருந்ததாகவும், வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட 11 சங்கங்களும் அது தொடர்பாக கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்த நிலையிலேயே குறித்த நிதி கிடைக்க இருந்ததாகவும், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திலிருந்து தம்மை எந்தவிதமான முன்னறிவுப்புக்களோ அல்லது குற்றச்சாட்டுக்களோ இன்றி நீக்கப்பட்டோம், தற்போது வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தை தற்போது ஒரு கட்சி தம்வசம் வைத்திருப்பதாகவும், குறித்த விடயம் தொடர்பில் எமக்கு உதவி வழங்கவிருந்த நிறுவனத்திற்க்கு நான் குறிப்பிட்டடிந்தேன்.
தற்போது கட்சி சமாசம் நடாத்துவதால் சமாசம் ஊடாக எம்மால் கடிதம் தரமுடியாது எமது 11 சங்கங்களும் இணைந்து கடிதம் தருகின்றோம் என தெரிவித்த போது உங்களுக்கு மேலுள்ள அமைப்பு ஒரு கட்சிக்கு கீழ் இயங்குவதால் எமக்கு பல சிக்கல்கள் ஏற்படும் அதனால் அந்த நிறுவனம் எமக்கு உதவுவதை நிறுத்தி மட்டக்களப்பு சென்றுள்ளது.
இன்று எமக்காக ஒதுக்கப்பட்ட ஒன்றரை கோடி ரூபா மட்டக்களப்பு மாற்றப்படவுள்ளது.
இவ்வாறு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மேலும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதேவேளை இந்தியாவில் தமிழ்நாடு உச்ச நீதிமன்றில் கச்சதீவை மீள பெறப்பட வெண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது கச்சதீவு தமிழ்நாடு வசமானால் நாம் இங்கு எந்தவிதமான தொழிலையும் செய்யமுடியாது. இதனால் நாம் ஒருபோதும் கச்சைதீவை வழங்க முடிதாது எனவும் தெரிவித்தார்..