புத்தளத்தில் 15 வயது பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமை பாதிரியார் ஒருவரை கைது செய்ய மாரவில தலைமையக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யத் தேடப்படும் சந்தேகத்திற்குரிய அருட்தந்தை தலைமறைவாக உள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கைது செய்ய தேடப்பட்டு வரும் இந்த அருட்தந்தை நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல் அறிக்கை மாரவில நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அருட்தந்தை நாட்டை விட்டு தப்பிச் சென்றால் அவரை கைது செய்யுமாறு உத்தரவும் பெறப்பட்டுள்ளதாகவும் உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் மாணவியின் பெற்றோருக்கு இது தெரியவந்ததையடுத்து, பொலிஸ் மா. அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மாரவில தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.