இலங்கையின் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் தற்போது கொழும்பு தாமரைக் கோபுரமும் இடம்பிடித்துள்ளது.
தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளதாக கோபுரத்தின் முகாமைத்துவ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
நேற்றைய(08) நிலவரப்படி தாமரை கோபுரத்திற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 60,755 என தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களில் 18,626 பேர் வெளிநாட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இனிவரும் காலங்களில் கொழும்பு தாமரைக்கோபுரத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளி, ஒலிபரப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.