ஊழியர்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகை

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு புதிய வசதி ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் ஊழியர் சேமலாப நிதி தொகையின் முப்பது வீதத்தை பிள்ளைகளின் உயர்கல்விக்காக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் அல்லது டிப்ளோமா கற்கை நெறிகளை கற்பதற்காக எதிர்பார்க்கும் பிள்ளைகளின் பெற்றோர் (ஊழியர் சேம லாப நிதியத்தின் அங்கத்தினர்கள்) இந்த சலுகைக்காக விண்ணப்பிக்க முடியும்.

புதிய வசதி
2012 ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய திருத்தச் சட்டமூலத்தில் மாற்றங்களை செய்து அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபான் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த சலுகைத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வீடு நிர்மாணிப்பதற்கு அல்லது காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்கு மட்டுமே தற்பொழுது ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 30 விதமான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கற்கை நெறிகளை முன்னெடுப்பதற்காக வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தம் 5 ஆயிரம் மாணவ மாணவியருக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor