வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்

ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் காலை உணவானது நீண்ட நேர இடைவெளிக்கு பின் உண்ணக்கூடிய உணவு.

காலை உணவை தவிர்த்தால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் காலை உணவை தவறாமல் உண்ண வேண்டும்.

ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போதைய அவசர உலகில் காலை உணவை சாப்பிட நேரமில்லாமல் ஜூஸ், சாலட் என்று சாப்பிடுகிறோம்.

இவைகளும் ஆரோக்கியமானவை தான். ஆனால் இவற்றை வெறும் வயிற்றில் உண்பது நன்மைக்கு பதிலாக தீங்கையே விளைவிக்கும்.

பழ ஜூஸ்கள்

பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடியவை தான். ஆனல் அந்த பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடிக்கும் போது அதன் விளைவாக கணையத்தில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

பழங்களை ஜூஸ் வடிவில் எடுக்கும் போது அதில் உள்ள ஃபுருக்டோஸ் வடிவிலான சர்க்கரை, கல்லீரலில் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகின்றன.

பழங்களை ஜூஸாக எடுக்கும் போது அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன. ஏனெனில் பழங்களின் தோலில் தான் அந்த நார்ச்சத்துள்ளது.

பழச்சாறுகளை தயாரிக்கும் போது அந்த நார்ச்சத்து வடிகட்டி பிரித்தெடுக்கப்படுகின்றன.

இதன் விளைவாக பழ ஜூஸ்களை குடிக்கும் போது இரத்த சர்க்கரை அளவு சட்டென அதிகரித்து சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, திராட்சை, கொய்யா போன்ற பழங்களில் உள்ள அமிலங்கள் குடலில் அமில உற்பத்தியை அதிகரித்து அல்சர், இரைப்பை அழற்சி ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் ஃபுருக்டோஸ் உள்ள பழங்களை உட்கொண்டால் அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மெதுவாக்கும்.

எனவே இந்த மாதிரியான பழங்களை உட்கொள்ளக்கூடாது.

தயிர்

என்ன தான் தயிர் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும் தயிரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதில் உள்ள லாக்டிக் அமில பாக்டிரியாக்கள் லயிற்றில் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதால் பயனற்றதாகும்.

அதிகப்படியான அமிலத்தன்மை காரணமாக வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி செய்யப்பட்டு அசிடிட்டி பிரச்சனையை வரவழைத்துவிடும்.

Recommended For You

About the Author: webeditor