மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியின் ஆன்மீக மாநாடு

இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாட்டு அறப்பணி மையத்தின் எற்பாட்டில் 34 ஆவது  ஆண்டில் நடாத்தப்படும் இரண்டாவது  மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியின் சமுதாயப்பணி பக்திநெறியின் ஆன்மீக மாநாடு இன்று யாழ் வீரசிங்க மண்டவத்தில்  இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாட்டு அறப்பணி மையத்தின் தலைவி கலைவாணி சிறிகாந்தன் தலைமையில் நடைபெற்றது…

இதில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாட்டு அறப்பணியினை வலுப்படுத்தும் வகையில் நடைபயணமும் இடம்பெற்றது..

இவ் நடைபயணமானது நல்லூர்  ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகிய அங்கியிருந்து பருத்தித்துறை வீதியுடாக வந்து யாழ் பலாவி வீதியடாக வந்து யாழ் வைத்தியசாலை வீதியுடாக வந்து கே.கே.எஸ் வீதியுடாக யாழ் வீரசிங்கமண்டவத்தின்  முன்பாக நிறைவடைந்தது..

அதனை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாட்டு அறப்பணி மையத்தின் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து செவ்வாடை சக்தியின் 108 திருவிளக்கு பூஜையும் இடம்பெற்றன…

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி செயலகத்தின் வடமாகாண மேலதிக செயலாளர் இ.இளங்கோவன்,கலந்துகொண்டார்….

இங்கு யாழ் மாநகர ஆணையாளர் த ஜெயசீலன்,இலங்கை தமிழரசுக்கட்சி பிரதிதலைவர் சட்டத்தரணி கே.தவராசா, மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,வடமாகாணம் ,மற்றும் எனைய மாவட்ட  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாட்டு அறப்பணி மையத்தின் கீழ் இயங்கும் சமயமன்றங்கள்,நிலைய அமைப்பினர்,உறுப்பினர்கள்,செயற்பாட்டாளர்கள்,ஆன்மீக அறிஞசர்கள்,பலரும் கலந்துகொண்டனர்….

Recommended For You

About the Author: webeditor