பண்டமாற்று முறையின் ஊடாக எரிபொருள் பெற்றுக்கொள்ள போகும் இலங்கை

ஈரானில் இருந்து பெறப்படும் எரிபொருட்களுக்கு பதிலாக இந் நாட்டு தேயிலை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான இரு நாட்டு அரசுகளும் இடையில் கடந்த 2021 ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தான நிலையில் எதிர்வரும் ஜூலையில் இருந்து இந்த முறை செயற்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் ஈரானிடம் இருந்து இலங்கை பெற்றுள்ள 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக முதல் தொகுதி தேயிலை உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி மாதம் ஒன்றுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேயிலையை ஈரானுக்கு 48 மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பண்டமாற்று வர்த்தகம் அல்லது பண்டமாற்று முறையின் கீழ் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த தேயிலைக்கு, இலங்கையில் உள்ள தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை ரூபாயில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கொடுப்பனவுகளை செலுத்தவுள்ளது.

மேலும், ஈரானிய தேயிலை இறக்குமதியாளர்கள் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு ரியால்களில் இது தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor