சர்ச்சைக்கு உட்பட்டிருந்த மயக்க மருந்து பாவனையில் இருந்து நீக்கம்!

குழந்தை ஒன்று மயக்கமருந்தால் உயிரிழந்ததாக கடந்த நாட்களில் வெளியாக தகவல் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அம் மருத்து பாவனையில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய புபிவகைன் (Bupivacaine) மயக்க மருந்து தொகுதியின் பரிசோதனைகள் நிறைவடையும் வரை, அதனை பாவனையில் இருந்து நீக்கியுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேசமயம் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மாத்திரம் குறித்த மருந்துத் தொகுதியை விநியோகித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி ஜயரத்ன தெரிவித்தார்.

மேலும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தின் 109 ஆவது பிரிவினை பயன்படுத்தி, பதிவு செய்யாமலேயே குறித்த மருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Recommended For You

About the Author: webeditor