போலியான தகவல்களை கொடுத்து கடன் பெற முயற்சித்த பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக விசாரணை!

பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் போலியான கையொப்பத்தைப் பயன்படுத்தியதுடன், சம்பள அறிக்கையையும் போலியான தரவுகளுடன் சமர்ப்பித்து இலட்சக்கணக்கான ரூபாவை கடனாகப் பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு மோசடியான முறையில் இரண்டு முறை கடன்களை குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குற்றச்சாட்டுக்குள்ளான பிரதான பொலிஸ் பரிசோதகர் தற்போது பாணந்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வருகின்றார்.

Recommended For You

About the Author: webeditor