யாழ் சர்வதேச விமானநிலையம் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானம் !

யாழ் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு குறித்து கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala de Silva தலைமையில் இன்றைய தினம் (16-06-2023) ஆராயப்பட்டது.

இந்த விஸ்தரிப்பு குறித்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, Douglas Devananda கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர், விமான நிலைய உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய கலந்துரையாடலில் விமான நிலையத்தை வடக்கு பக்கமாக விஸ்தரிப்பதுடன் விமான சேவையை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பாரிய அளவிலான விமானங்கள் வந்து இறங்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதிகளவான ஆசனங்களை கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் தொடர்ந்து அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் யாழ் மக்கள் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.

இறங்குதளம் விஸ்தரிக்கப்பட்ட வேண்டுமெனவும் மக்களுடைய காணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மேலும் நிலங்கள் சுவிகரிக்கப்படாமல் எப்படியாக செய்ய முடியும் என்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

கூடுதலாக விமான நிலையத்தின் வடக்கு பக்கம் அதாவது கடல் பக்கம், இயன்றளவு காணிகளை ஓடுதளத்தை விஸ்தரித்து, தெற்கு பக்கத்தில் மிக சொற்ப அளவிலான காணிகளை எடுத்து இந்த விஸ்தரிப்பு நடவடிக்கை இணை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆலோசனைகளை முன் வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு விமான நிலைய விஸ்தரிப்பை மேற்கொள்ள வலியுறுத்தினார்

Recommended For You

About the Author: webeditor