இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) வியாழக்கிழமை (ஜூன் 15) கைது செய்துள்ளது.
பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு வெளியே பஸ்ஸை ஓட்ட அனுமதிப்பதற்காக குறித்த முகாமையாளர் 15,000 இலஞ்சம் பெறும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிராந்திய போக்குவரத்து முகாமையாளருக்கு எதிராக பாணந்துறை டிப்போவின் பஸ் சாரதி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் நாளை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.