கின்னஸ் சாதனை படைத்த இலங்கை இராணுவ வைத்தியர்கள்

உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை (01.06.2023) கொழும்பு இராணுவ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சத்திரசிகிச்சை கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆலோசகர் சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் (டாக்டர்) கே. சுதர்ஷன், கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் ஜெனிட்டோ சிறுநீர் பிரிவின் தலைவர், கப்டன் (டாக்டர்) டபிள்யூ.பி.எஸ்.சி பத்திரத்ன மற்றும் டாக்டர் தமாஷா பிரேமதிலக ஆகியோருடன் இணைந்து சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர்.

மேலும், குறித்த அறுவை சிகிச்சையின் போது ஆலோசகர் மயக்க மருந்து நிபுணர்களாக கர்னல் (டாக்டர்) யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் கேணல் (டாக்டர்) சி.எஸ் அபேசிங்க ஆகியோரும் செயல்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு இராணுவ மருத்துவமனையில் வியாழக்கிழமை (1) வைத்தியர்களால் சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கல் 13.372 சென்றிமீற்றர் நீளமும் 801 கிராம் எடையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் காணப்படும் மிகப்பெரிய சிறுநீரகக் கல் (2004 இல் இந்தியா) 13 செ.மீ. மற்றும் மிகப்பெரிய சிறுநீரகக் கல் (2008 இல் பாகிஸ்தான்) 620 கிராம் எடை கொண்டதாக பதிவாகியிருந்தது குறிப்படத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor