எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் எரிபொருள் வரிசை காணப்பட்டமைக்கான காரணத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
கடந்த வாரம், 255 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்கள் தேவையான குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சில பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் அருகே வரிசைகள் காணப்பட்டன.
எரிபாருள் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கத்தவறிய எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.