தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த மரக்கறிகளின் மொத்த விலை தற்போது கணிசமான அளவில் குறைந்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், காய்கறிகள் விற்பனையும் குறைந்துள்ளதாக, வியாபாரிகள் கூறுகின்றனர்.
குறைந்துள்ள விலை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்படும் மரக்கறிகள் குறைப்பு, கொள்வனவுக்கான விற்பனையாளர்களின் எண்ணிக்கை குறைவு, அண்மைய நாட்களில் விலை அதிகரிப்பு, நுகர்வு குறைவு போன்ற காரணிகளினால் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
350 முதல் 400 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் இன்று (07) 150 ரூபாவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மலையகப் பகுதிகளில் இருந்து வரும் கரட், வெண்டைக்காய், கறி மிளகாய் போன்ற காய்கறிகளின் விலை ரூ. 100 முதல் 200 வரை குறைந்துள்ளது.