இலங்கையை பிறப்பிடமாக கொண்ட 34 வயதான ஆயிஷா என்ற பெண் பிரித்தானிய நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேல்ஸில் உள்ள கடுமையான குற்றவியல் வழக்குகளை முக்கியமாகக் கையாளும் கிரவுன் நீதிமன்றத்தில் வெள்ளையர் அல்லாத மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மிகவும் இளைய நீதிபதியாகியாக ஆயுஷா உள்ளார்.
ஆயிஷாவின் குடும்பம் அவருக்கு 14 வயதாக இருந்தபோது பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தது.
லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தற்கு முன்பே ஹாரோகேட் மாவட்ட மருத்துவமனையில் நோயியல் நிபுணராகப் பணியாற்றினார்.
பாரிஸ்டராக பணியாற்றிய அவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தனது திறமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சாதி, இனம், நிறம், வயது போன்றவற்றின் தாக்கம் வெற்றியில் இல்லை என குறிப்பிட்டார்.