இந்தியாவில் கிட்டத்தட்ட 150 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக் கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றதாக அவ்வாடு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆணையம் ஆய்வு செய்து அங்கீகாரத்தை புதுப்பித்து வருகிறது.
இந்நிலையில் போதிய வசதிகள் இன்மை, விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமை போன்ற காரணங்களுக்காக கடந்த இரண்டு மாதங்களில் 40 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்துள்ளன.
தமிழகத்தின் முக்கிய கல்லூரிகளும் அடக்கம்
இதில் தமிழகத்தின் பிரபல சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளும் அடங்கும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களிலுள்ள மேலும் பல கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகலாம் எனவும் கூறப்படுகிறது.
கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது, ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் பதிவில் குறைபாடு, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற குறைபாடுகள் கல்லூரிகளில் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் மருத்துவக் கல்லூரிகள் 30 நாள்களுக்குள் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம். அது நிராகரிக்கப்பட்டால் சுகாதார அமைச்சை நாடலாம் எனவும் கூறப்படுகின்றது .
அதேவேளை இந்தியாவில் 2014ல் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2023ல் 660 ஆக அதிகரித்துள்ளதக்க தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.