யாழ்.பொது நூலகம், சிங்கள காடையர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டு இன்று 42 ஆண்டுகள் ஆகின்றது.

தென்கிழக்காசியான் சிறந்த நூலகம் என போற்றம்ப்பட்ட யாழ்.பொது நூலகம், சிங்கள காடையர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டு இன்று 42 ஆண்டுகள் ஆகின்றது.

அதன் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி
நினைவேந்தலின்போது யாழ்.பொது நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், பொது நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.


நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில் அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், பழைமையான ஏடுகள் என்பவை பெரும்பான்மையின காடையர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டது.

யாழ்.நூலகமே தென்கிழக்காசியாவில் மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது. நூலகத்தை எரித்துவிட்டால் தமிழர்களின் அறிவும் மழுங்கிவிடும் என நினைத்து சில முட்டாள்கள் அரங்கேற்றிய எரிப்பில் பொக்கிசமாக பாதுகாக்கப்பட்ட பல அரிய புத்தங்களும் , ஓலைச்சுவடிகளும் அழிக்கப்பட்டுவிட்டது.


எனினும் யுத்தகாலத்தின் பின்னர் யாழ் பொது நூகலம் புதுப்பொலிவோடு மீண்டும் தலைநிமிந்து நிற்கின்றது.

திட்டமிட்டு சிங்கள இனவெறி காடையர்களால் யாழ் பொது நூலகம் எரிக்கபப்ட்டமையானது இலங்கைத்தமிழ் மக்களின் வரலாற்றில் கறைபடித்த வடுவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor