க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் பாடசாலைக்குள் வெளி தரப்பினர் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான தகவல்
மேலும் பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை நேற்று முன்தினம் (29.05.2023) ஆரம்பமானதுடன் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பரீட்சையில் 472,553 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recommended For You

About the Author: webeditor