இலங்கை வரும் சீன கப்பலின் பின்னணியில் இருப்பது என்ன?

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு, அந்த நாட்டுக்கான தூதுவர் பாலித கோஹனவே அதிக பங்காற்றினார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த பாலித கோஹன, முன்னர் இலங்கைக்கான வெளியுறவு செயலாளராகவும் அவுஸ்திரேலியாவுடன் இரட்டை குடியுரிமை பெற்றவராகவும் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ளார்.

சீன கப்பல் தொடர்பில் பல அமைச்சுகளுக்கு பரிந்துரை

அத்துடன் இலங்கைக்கான சீன தூதுவராக நியமிக்கப்படும் முன்னர் அவர் இலங்கையில் உள்ள சீன நிறுவனம் ஒன்றில் உயர் பதவியையும் வகித்து வந்தவர் என்றும் அவரே சீன கப்பலின் இலங்கை பயணம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவிற்கு தீவிரமாக பரிந்துரைத்தார் என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உட்பட பல அரச நிறுவனங்கள் அனுமதி வழங்கிமைக்கும் அவரே பின்புலமாக செயற்பட்டுள்ளார். ஒரு பரிந்துரை வெளியுறவு அமைச்சுக்கும் சென்றுள்ளது.

எனினும் அமைச்சுக்கள் மத்தியில் குறைந்த செயற்பாட்டைக் கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சு, இந்த விடயத்தை உயர்மட்டத்தில் ஆராயவில்லை என்று அறியப்படுகிறது. இந்த நிலையில் சீனக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டைக்கு வருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சின் நடவடிக்கை

எனினும் எப்போதும் தீவிரமாக செயற்படும் இந்திய வெளியுறவு அமைச்சு இந்த விடயத்தில் மிகவும் காத்திரமாக செயற்பட்டு கப்பலின் பயணத்தை தாமதப்படுத்தியது.

தற்போது இலங்கையால் இந்த கப்பலுக்கு துறைமுக அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், இந்திய வெளியுறவு அமைச்சு, ராஜதந்திர மட்டத்தில் கவனமான செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது.

இலங்கைக்கு புதிய விமானம் வழங்க நடவடிக்கை

அத்துடன் இந்திய பாதுகாப்பு தரப்பும், கப்பலின் நகர்வுகள் குறித்து மிக உன்னிப்பான கவனத்தை செலுத்தி வருகிறது.

இதில் ஒரு கட்டமாகவே, கடல் கண்காணிப்புக்காக இலங்கைக்கு டோனியர் 228 விமானத்தையும் நாளையதினம் இந்தியா, இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது

Recommended For You

About the Author: webeditor