அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில முக்கிய வர்த்தகர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
10 வர்த்தகர்களின் கடனை வாராக் கடன்களாக அறிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வெல்கம தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்கள் குழுவின் கடன்கள் தொடர்பில் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.
“ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்காக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் நானும் இருந்தேன்.
பிரபல வர்த்தகர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்காக நாம் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி தனது நடவடிக்கைகளை திருத்திக் கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கோரிக்கை விடுத்துள்ளார்.