இலங்கையில் டிக்டொக் பாவனை தொடர்பில் சட்டத்தரணிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

டிக் டொக் மொபைல் செயலியை குழந்தைகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பேரழிவு நிலையை சந்திக்க நேரிடும் என சட்டத்தரணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசி பாவனையால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கூறுகையிலேயே ஜனாதிபதியின் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா இதனை சுட்டிக்காட்டினார்.

சீனாவின் டிக்டாக் செயலி
சீனாவின் பைட் டான்ஸ் என்ற நிறுவனம் டிக்டாக் செயலியை உருவாக்கியுள்ளது. நியூசிலாந்து , நோர்வே கனடா, ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு சொந்தமான சாதனங்களிலிருந்து டிக்டாக்கை தடை செய்தது.

அதோடு இந்தியாவிலும் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. டிக்டாக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறி குறித்த நாடுகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor