இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்தியா வழங்கியுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
புதிய விமானம் ஒன்றை தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், ஆரம்ப இரண்டு ஆண்டுகளுக்கு விமானத்தை இலவசமாக வழங்க இந்தியா ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் இரண்டு ஆண்டுகளின் முடிவில் புதிய டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி தனது கடற்படைக்கு உள்வாங்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.