நாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05-05-2023) 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு விடுதலை செய்யப்படுவதில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு 2 நாட்கள் விசேட சந்தர்ப்பு ஒன்றையும் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த தகவலை சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று (05-05-2023) மற்றும் நாளை (06-05-2023) இவ்வாறு சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கைதிகளின் உறவினர்கள் அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புகளை பொதிகளை கைதிகளுக்கு வழங்க முடியும்.
சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க வேண்டும்.
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.