ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்!

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை 9ம் திகதி புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 பேரை அடையாளம் காண்பதற்காக, பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் 40 பேரின் புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, சமூகவலைத்தளங்கள் மற்றும் சிசிரீவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய கொழும்பு மத்திய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த புகைப்படங்களில் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 071-8591559, 071-8085585, 011-2391358, அல்லது 1997 (Hotline) ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor