இலங்கை தொடர்பில் சனத் ஜயசூரிய வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய, இலங்கையை பற்றிய நேர்மறை மற்றும் எதிர்மறையான படத்தை விளம்பரப்படுத்த விரும்புகிறார் என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்து அழகிய கடற்கரைகள் மற்றும் பல சுற்றுலா தலங்களைப் பார்க்குமாறு மக்களை அவர் வலியுறுத்தினார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் கல்வி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்,இலங்கையின் கடந்தகால மோதல்கள் குறித்து எழுதுவதற்குப் பதிலாக, ஊடகவியலாளர்கள் தற்போது சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது சிறப்பாக உள்ள இலங்கை
ஒரு வருடத்திற்கு முன்பு இலங்கை ஒரு மோசமான காலகட்டத்தை எதிர்கொண்டது. மக்கள் எதிர்ப்பின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை விரும்பினர்.

ஆனால் இப்போது நாட்டில் உள்ள மக்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி இருக்கிறார்கள்.வரலாற்றில் எது நடந்திருந்தாலும், இப்போது எல்லாம் சிறப்பாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டங்களுக்குப் பதிலாக இலங்கையைப் பற்றிய சிறப்பான படங்களைக் காட்டுமாறு அவர் ஊடகவியலாளர்களை வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பான சுற்றுலாத்தலம்
எனது நாடு பாதுகாப்பாக உள்ளது என்றும், என் நாட்டிலுள்ள அழகையும் ஞானத்தையும் நீங்கள் பார்வையிடலாம் என்று கூற இதுவே சிறந்த தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கடினமான காலகட்டத்தை கடந்த போதும் இலங்கை கல்வியில் சிறந்து விளங்குவதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜம்மு காஷ்மீர் விஜயத்தின் போது தனது அவதானிப்புகளின் அடிப்படையில், இந்தியாவில் சிறந்த கல்வி முறை உள்ளது என்று இந்திய கல்வி முறையை அவர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor