நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக 10 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதா
இஸ்ரேல் அரசாங்கம் முன்வைத்த நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவிற்கே மக்கள் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவில் முன்வைக்கப்பட்டுள்ள மாற்றங்கள், நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்றும், அரசாங்கத்தின் கிளைகளுக்கு இடையே சமநிலையை மீட்டெடுக்கும் என்றும் கூறுகிறார். ஆனால் அது, ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவின் படி அரசு நியமிக்கும் ஒன்பது பேர் கொண்ட குழுக்கள் மூலமாக, உச்சநீதிமன்றத்தைத் தவிர மற்ற நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதாகும்.
இச்சட்டத்தினால் மக்களின் ஜனநாயகம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும், இது நீதியைச் சிதைக்கும் திட்டம் எனக்கூறி மக்கள் அந்த மசோதாவிற்கு எதிராக போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதா வலதுசாரிகள் தீர்மானிக்கும் நீதி ஆகிவிடும் எனக்கூறும் மக்கள் அதற்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாஹீவின் தலைமையிலான அரசாங்கம் இந்த மசோதா நாட்டின் சீர்திருத்ததிற்கு அவசியமானது என வாதிடுகிறது.