உக்ரைனுக்கு மேலும் உதவி வழங்கும் அமெரிக்கா!

உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் புதிதாக 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.

இதில் கூடுதல் ஹிமார்ஸ் சிஸ்டம் ஏவுகணைகளும் அடங்கும். இவை உக்ரேனிய படைகள் ரஷ்ய துருப்புக்களுக்கு முன் பகுதியை தாக்க உதவியாக இருக்கும்.

இந்த தொகுப்பில் ரஷ்ய விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளுக்கு எதிராக செயல்படக்கூடிய வான் ஏவுகணைகள், ஜாவெலின் எதிர்ப்பு கவச ராக்கெட்டுகள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

Recommended For You

About the Author: webeditor