இலங்கை கோடீஸ்வரர் கொலை பின்னணி தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோடீஸ்வர வர்த்தகரான ஒனேஷ் சுபசிங்கவின் மனைவியான பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண், அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

“உன்னை கொன்றுவிடுவேன்”
ஒனேஷ் சுபசிங்கவுக்கும் அவரது மனைவியான பிரேசில் நாட்டுப் பெண்ணுக்கும் வீட்டில் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், “உன்னை கொன்றுவிடுவேன்” என்று பல சந்தர்ப்பங்களில் மிரட்டியதாகவும் குறித்த வீட்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் நண்பி என கூறப்படும் மற்றைய சந்தேகநபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழிலதிபர் தனது மனைவி, மகள் மற்றும் மனைவியின் நண்பியுடன் சுற்றுலா ஒன்றிற்காக கடந்த 19ஆம் திகதி இந்தோனேஷியா சென்றதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

மாபியா கும்பல்
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்துள்ளதுடன் சுபசிங்கவின் கொலையின் பின்னர் அவரது மனைவியும்,மகளும்,பிரேசில் நாட்டு நண்பியும் உள்ள நிலையில் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும், சம்பவத்தின் பின்னர் தப்பியோடிய மனைவி மற்றும் அவரது நண்பியை தேடுவதற்காகவும் விசேட இரகசிய பொலிஸ் குழுவொன்று இந்தோனேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளது.

தொழிலதிபர் சுபசிங்கவின் பிரேசிலைச் சேர்ந்த மனைவியின் தோழி மாபியா கும்பல் ஒன்றின் தீவிர உறுப்பினர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கொல்லப்பட்ட சுபசிங்க இலங்கையில் முப்பத்திரண்டு வர்த்தக நிறுவனங்களை வைத்திருக்கும் கோடீஸ்வர வர்த்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor