கொழும்பு குதிரை பந்தய திடலில் கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் அணிந்திருந்த ஆடை, அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி மற்றும் இரத்த மாதிரி உள்ளிட்ட 11 வழக்கு பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி அறிக்கையை பெறுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பான தகவல்
கடந்த மாதம் 17ஆம் திகதி கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.
கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்திருந்தார்.
இதேவேளை, விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்த யுவதியின் காதலன் என அடையாளம் காணப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் வெல்லம்பிட்டியவில் வசிக்கும் பசிந்து சதுரங்க என்ற மாணவன் குறித்த யுவதியை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தமை விசாரணையில் தெரியவந்திருந்தது.