அரச நிறுவனங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு!

அரசாங்க வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பில் திறைசேரி அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.

இதற்கமைய,அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக கையிருப்பிலுள்ள வாகனங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார்.

மாநாடுகள், கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் போன்றவற்றை முடிந்தவரை ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி நடத்த வேண்டும் என்றும், இதனால் போக்குவரத்துத் தேவைகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து செலவினங்கள் குறைப்பு
மேலும் அலுவலக தேவைகளுக்கான போக்குவரத்து செலவினங்களைக் குறைக்கவும் அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தனது பணிகளுக்கு வாகனங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே பணம் வழங்கப்படும் என நிதி அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதற்கமைய, தேர்தல் நடவடிக்கைகள் அதன் அத்தியாவசிய நடவடிக்கைகளாக பெயரிடப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் புதிய சுற்றறிக்கையின் மூலம் வாகனப் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தலுக்கான போக்குவரத்து ஏற்பாடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

Recommended For You

About the Author: webeditor