அண்மையில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் பேரழிவினை ஏற்படுத்திய நிலநடுக்கத்தினால் சுமார் இருபதாயிரம் பேர் வரை இதுவரை மரணித்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியும் காயமடைந்தும் உள்ளமை மிகப்பெரும் இழப்பாகும்.
அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் அந்நாட்டு மக்களின் துன்பமான சூழலில் இலங்கையராக தாமும் பங்கெடுப்பதாக கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லுவை சந்தித்து நேரடியாக தமது துயரச் செய்தியினையும் பகிர்ந்து கொண்டார்..