பொது அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடயத்தை சற்றுமுன் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (09.02.2023) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
இந்த நிலையில் குறித்த உத்தரவு தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பை சபாநாயகர் நாடாளுமன்றில் சமர்பித்தார்.
அதில் 40ஆவது அதிகாரசபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.