பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரான்ஸ் மக்களின் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிகளைக் கண்காணிக்கும்படி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது எரிசக்தி கட்டணங்களுடன் போராடும் வாடிக்கையாளர்களிடமிருந்து இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோசடியார்கள் பயனர்களை சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மையான எரிசக்தி வழங்குநர் தளங்களைப் போலவே தோற்றமளிக்கும் போலி வலைத்தளங்களில் உள்நுழைய அழைக்கின்றனர்.

சலுகைகள் வழக்கமாக ஒரு இணைப்பு வழியாகவோ, அல்லது Facebook பதிவுகள் மூலமாகவோ நுகர்வோருக்கு அனுப்பப்படுகின்றது.

இந்தச் செய்திகள் மற்றும் இடுகைகள் பொதுவாக உண்மையானவை மற்றும் ஆற்றல் வழங்குநரிடமிருந்து நேரடியாகத் தோன்றலாம். பயனர்கள் இணைப்பை அழுத்தி தங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இணைப்பில் பதிவு செய்துக் கொண்டால் பணம் சேமிக்க முடியும் என கூறப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றது.

அவ்வாறு கூறிய போதிலும் சில பயனர்களின் பணத்தை சேமிப்பதற்கு பதிலாக, நூற்றுக்கணக்கான யூரோக்கள் வசூலிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டதன் ஊடாக இது பணம் மோசடி என தெரியவருகிக்றது.

இது ஒரு போலி சலுகை. வலைத்தளம் எனவும் இதன் ஊடாக 786 யூரோக்கள் பணம் பறிக்கப்படுவதாக கண்டுபிடிக்ப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor