வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.12.2022 மற்றும் 14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அதேவேளை வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வரும் 13 மற்றும் 16 திகதிகளில் வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இது புயல் சின்னமாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும், ஆனால் வலுவிழக்கத்தான் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒருவேளை இந்த புயல் உருவானால் இதற்கு மொக்கா எனப்பெயரிடப்படும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.