பிரித்தானியாவில் மின் கட்டண அதிகரிப்பால் குடும்பம் ஒன்றின் வினோத முடிவு!

பிரித்தானியாவில் கடந்த சில காலங்களாக மின் கட்டணம் உயர்ந்தால், மக்கள் கடும் நெருக்கடி நிலையை சந்தித்து வரும் நிலையில் குடும்பம் ஒன்று வித்தியாசமான தீர்மானத்தை எடுத்துள்ளது.

தொடர்ந்து அதிகமான மின்கட்டணத்தை தாங்க முடியாதென எண்ணிய குடும்பம் ஒன்று மின் இணைப்பை முழுமையாக துண்டித்து விட்டு இருளில் வாழ முடிவு செய்துள்ளனர்.

இந்த குடும்பம் 2 நூற்றாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறைக்கு திரும்பியிருக்கிறது என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சாவ்தார் டோடொரோவ் என்ற நபரின் வீட்டுக்கான மின்கட்டணம் 320 யூரோ என்ற அளவில் வந்துள்ளது.

மின் கட்டண செலவை குறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்த இவரது குடும்பம், ஒட்டுமொத்தமாக மின் இணைப்பையே துண்டித்துவிட்டது. தற்போது டோடொரோவின் வீட்டில் அவரது மனைவி மோடா மற்றும் இரண்டு குழந்தைகள் அனைவரும், இரவில் வீட்டுக்குள் நடமாட ஹெட்டார்ச்களை பயன்படுத்தி வருகின்றனர்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, நெற்றியில் கட்டிக் கொள்ளும் இந்த விளக்குகள் தான் அவர்களுக்கு வெளிச்சத்தை தருகிறது. இது தவிர அவ்வபோது மெழுகுவர்த்திகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஹெட்டார்ச் லைட்டுகளுக்கு வெளியிடங்களில் சார்ஜ் செய்ய மாதம் ஒன்றுக்கு 8 பவுண்ட்கள் மாத்திரமே செலவாகிறதென குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட டோடொரோவின் மனைவி, “என் கணவர் முன்வைத்த யோசனையை வீட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டோம்.

அதே சமயம், நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதால், அதிக வெளிச்சமற்ற எங்கள் வீடு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகத் தோன்றும்.

ஆனால், மெழுகுவர்த்தியை பயன்படுத்துகிறபோது வீட்டில் ஒரு மகிழ்ச்சியான உணர்வு தென்படுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor