பிரான்ஸில் உணவு உற்பத்தியாளர்கள், மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து இல்லாமல் உணவை எதுவரையான காலப்பகுதி வரை வைத்து உண்ணலாம் என்பதை நுகர்வோருக்கு தெளிவுபடுத்தும் வகையில் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உண்ணக்கூடிய பொருட்களைத் தூக்கி எறிவதைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அரச ஆணையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 மில்லியன் டன்கள் உண்ணக்கூடிய உணவு வீணடிக்கப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. அதாவது ஒரு குடிமகனுக்கு 150 கிலோ மற்றும் அது ஒரு வருடத்திற்கு எடுத்துக் கொள்ளும் உணவிற்கு சமமாகும் என சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்போது வரை, ஒவ்வொரு உணவுப் பொருளின் மீதும் ஒரு பயன்பாட்டுத் திகதி எழுதப்பட்டுள்ளதுடன் இது பெரும்பாலும் குறைந்தபட்ச காலவதி திகதியை குறிப்பிட்டுள்ளது.
எனினும் சில உணவுகள் அதே திகதியில் காலாவதியாகவிடுவதில்லை. அதனை இன்னும் சில நாட்களுக்கு எவ்வாறு பயன்படுத்துவது அல்லது அதனை அதிக நாட்கள் பதப்படுத்தி வைப்பது போன்ற விடயங்கள் நுகர்வோருக்கு தெரியும் வகையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.]
அதனை அந்த திகதிக்கு பின்னரும் உட்கொள்ள முடியுமா? உட்கொண்டால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? அல்லது உகந்த சுவைக்காக பாதுகாப்பாக எவ்வாறு வைத்துக் கொளள் முடியும் போன்ற விடயங்களையும் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது, நுகர்வோர் திகதிகளில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் உணவை மேலும் சில வைத்து உட்கொள்ள முடியும் என தெரிவுப்படுத்தவும், உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைத் தூக்கி எறிவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உதாணரமாக சில மசாலா பொருட்களில் வாசனைகள் சிறிய அளவில் குறைந்திருக்கும். அதேபோல் சில பிஸ்கட் வகைகள் உளர்ந்த நிலையில் காணப்படும். எனினும் அவற்றை உட்கொள்ள பயன்படுத்த கூடிய வகையில் காணப்படும்.
அதற்கமைய, அமுலுக்கு வரும் சட்டத்திற்கமைய, இந்த குறிப்புகளை தயாரிப்புகள் மீது சுட்டிக்காட்டினால் அவற்றினை மக்கள் தூக்கி எறிவதனை தவிர்க்க முடியும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.