பார்வையற்றோருக்கான பாடசாலை ஒன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 11 சிறுவர்கள் உயிரிழப்பு!

கிழக்கு உகாண்டாவில் பார்வையற்றோருக்கான பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கம்பாலாவின் கிழக்கே முகோனோ மாவட்டத்தின் லுகா கிராமத்தில் உள்ள பார்வையற்றோருக்கான சலாமா பாடசாலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் இவ் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

11 பேர் பலி

“தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, ஆனால் இதுவரை 11 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் மற்றும் ஏனையோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று உகாண்டா பொலிஸார் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தின்போது விடுதியில் 21 மாணவிகள் தங்கியிருந்ததாக மாவட்ட பாதுகாப்பு தலைவர் பாத்திமா இன்டிபசா தெரிவித்துள்ளார்.

விபத்தில் 3 பேர் மட்டுமே உயிர் தப்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

உயிரிழந்த பார்வையற்ற மாணவிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் எரிந்து விட்டதாகவும், அவர்களை அடையாளம் கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தீவிபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor