எதிர்வரும் தீபாவளி தினத்தன்று (24-10-2022) மின்வெட்டை அமுலாக்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 தினங்களுக்கான மின் தடை அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று (21-10-2022) மாலை அறிவித்துள்ளார்.
இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில், தீபாவளி தினத்தன்றும் மின்தடை அமுலாக்கப்படுமா? என்பது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவிடம் வினவியபோது,
இதற்கு பதிலளித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் தாம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், பெரும்பாலும் தீபாவளி தினத்தன்று மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.