பிரச்சினைகள் குறித்து அறிவிக்க புதிய வாட்ஸ்அப் இலக்கம்

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு புதிய வாட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பொதுமக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து 076 641 20 29 என்ற... Read more »

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.. யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இன்று(15)... Read more »
Ad Widget

பாணந்துறையில் பஸ் விபத்து – நான்கு பேர் காயம்

 (15) அதிகாலை 4 மணியளவில் பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து கவிழ்ந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட... Read more »

கொளுத்தும் வெயிலில் காரைதீவு சந்திக்கருகாமையில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது, அம்பாறை மாவட்டம், காரைதீவு சந்திக்கருகாமையில் ஆரம்பமானதுடன், பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் கொளுத்தும் வெயிலில் கவனயீர்ப்புப் போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர். இதன் போது, இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எந்தவொரு... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து !

பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து ! இளங்குமரன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more »

இன்றைய ராசிபலன் 16.02.2025

மேஷம் இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். ரிஷபம் இன்று பணவரவு சுமாராக இருக்கும்.... Read more »

ரஜரட்ட ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான வேன்; சாரதிக்கு காயம்

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (14) காலை விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரயில், வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் வேன் பலத்த சேதமடைந்ததோடு, சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டது.... Read more »

NPP எம்பி பைஸலின் சகோதரர் கைது

கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் கட்சியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைஸலின் சகோதரரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கொஸ்வத்த, ஹல்தடுவன பகுதியில் இன்று (14) காலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிசார்... Read more »

அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் திங்களன்று

இந்த ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத்திட்டம் இதுவாகும். அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட உள்ளது.... Read more »

இன்று முதல் தினசரி மின்வெட்டு இல்லை

இன்று (14) முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள மூன்று ஜெனரேட்டர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை செயலிழந்தன. இருப்பினும், தடையின்றி மின்சாரம் வழங்குவதில்... Read more »