சிறீதரனுக்கு சிவசக்தி ஆனந்தன் அழைப்பு

தமிழரசு கட்சியினை தமது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு ஈபிஆர் எல்எப் இன் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். ஒருவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் அண்மையில்... Read more »

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அரசாங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெறும் சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்கள் அனுமதிகக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வருகின்றன. இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிழக்கு பிராந்திய ஊடகவியலாளர்கள்... Read more »
Ad Widget Ad Widget

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா: தேவையான உணவை எடுத்து வர வேண்டும்

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் இம்முறை இலங்கையை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மாத்திரமே கலந்துக்கொள்ள உள்ளதாகவும் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படாது என்பதால், தேவையான உணவுகளை எடுத்து வருமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாதசுந்தரம்... Read more »

ஜே.வி.பிக்கு இந்தியாவில் 300 கோடி பரிசு

தேசிய மக்கள் சக்தி எனப்படும் ஜே.வி.பி இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் இலங்கையில் பல்வேறு சர்ச்சைகளும் அரசியல் அதிர்வலைகளும் ஏற்பட்டுள்ளன. உள்நாட்டில் அதிகரித்துள்ள மக்கள் ஆதரவால் அடுத்துவரும் தேர்தல்களில் ஒரு தீர்மானமிக்க அரசியல் சக்தியாக ஜே.வி.பி உருவெடுக்கும் என்பதை... Read more »

முடங்கியது சுகாதாரச் சேவை

72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (13) காலை மீண்டும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். படுதோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தை... Read more »

அலி சப்ரி ரஹீம் எம்.பியின் கார் விபத்து: ஒருவர் காயம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 வது மைல் போஸ்ட்டுக்கு அருகில் இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்... Read more »

பைத்தியகார அரசியல்வாதிகளின் தேவைக்காக தேர்தலை ஒத்திவைக்க முடியாது

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது எனவும் சில நேரம் கட்சி அதனை ஆதரிக்க தீர்மானித்தாலும் தனது ஆதரவு கிடைக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று (12)... Read more »

59 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்

அமெரிக்காவில் 2023 ஆம் ஆண்டு குடியுரிமை பெற்றவர்கள் சம்பந்தமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைய கடந்த ஆண்டு 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். அமெரிக்க குடியுரிமை பெறுவதில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது. உத்தியோபூர்வ அறிக்கையின்... Read more »

அமெரிக்காவில் வெப்பமான பாலைவனத்தில் தோன்றிய ஏரி

அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தை, அண்மையில் தாக்கிய புயல் மழையைத் தொடர்ந்து, அங்குள்ள உலகில் மிகவும் வெப்பமான ‘Death Valley’ பாலைவனத்தில் ஆச்சரியப்படும் வகையில் ஏரி உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வீசிய சூறாவளி மற்றும் கனமழையில் காரணமாக ‘Death Valley’ தேசியப் பூங்கா... Read more »

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமை குறித்து விசாரணைகள் ஆரம்பம்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்து எழுத்தாணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று (12) மனுதாரர்... Read more »