முட்டை சாப்பிடுவதை கைவிடும் சுவிஸ் மக்கள்

ஐரோப்பாவில் மிகவும் ஆரோக்கியமான மக்கள் வாழும் நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது. ஆனால், இங்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதால் சுவிஸில் உற்பத்திகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முட்டை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து,... Read more »

சூடுபிடிக்கும் இலங்கை தேர்தல் களம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க அணியில் பலர் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ரொஷான் ரணசிங்கவின் புதிய அரசியல் அணியுடன் இணைந்து செயற்படும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஊடகங்களிடம் கருத்து வௌியிட்டுள்ளார். தொடர்ந்தும்... Read more »
Ad Widget

100 ஆண்டுகளாக தொலைந்து போன ஓவியம் கண்டுபிடிப்பு

100 ஆண்டுகளாக தொலைந்து போனதாக நம்பப்படும் ஆஸ்திரிய ஓவியர் குஸ்டாவ் கிளிம்ட்டின் ஓவியம் ஒன்று வியன்னாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 54 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் பெறுமதியான “ஃபிராலின் லீசரின் உருவப்படம்”, இறுதியாக 1925 இல் பொதுவில் பார்க்கப்பட்டது. அதன் பிறகு ஓவியத்துக்கு என்ன ஆனது... Read more »

ஐ.எம்.எப். உடன் கலந்துரையாடலுக்கு தயாராகுங்கள்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை விலகிக் கொண்டால் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மீண்டும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன், அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான உடன்படிக்கையுடன் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர்... Read more »

அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம்

சாரதிகள் விதிமுறைகளை கடைப்பிடிக்காததே அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.... Read more »

யாழில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாண... Read more »

நெல்லியடி இளைஞன் மீது வாள் வெட்டு

கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்திபன் எனும் 30 வயது இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான... Read more »

சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறிய பட்டா ரக வாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த... Read more »

சமரிக்கு இந்தியாவிலிருந்து அழைப்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான அழைப்பிதழ் இலங்கை அணியின் சகலதுறை வீராங்கனை சமரி அத்தபத்துக்கு கிடைத்துள்ளது. அதன்படி உத்தர பிரதேச வோரியர் அணிக்கு மாற்று வீராங்கனையாக சமரி அத்தபத்து அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து வீரர் லொரன் பெல்லுக்கு... Read more »

தேனிக்கு கொண்டுச் செல்லப்படும் பவதாரிணியின் உடல்

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் இறுதிக் கிரியைகள் நாளை 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இன்றிரவு 10 மணியளவில் அவரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி... Read more »