யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற போராட்டம்

வடக்கு கிழக்கு கூட்டு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இப் போராட்டம் இன்று காலை நடாத்தப்பட்டுள்ளது. “இதன் போது மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதே, அச்சமின்றி வாழ விடுங்கள், அச்சுறுத்தும் சட்டங்களை உருவாக்கி மனித... Read more »

யாழ் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு பாலியல் தொலை கொடுக்கும் ஆசிரியர்

யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவிகள் சிலரை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு... Read more »
Ad Widget

யாழில் இடம்பெற்ற விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றிரவு(19.04.2023) இடம்பெற்ற வீதி விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்... Read more »

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த யுவதி!

யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (19-04-2023) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பொலிகண்டி ஆலடி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திராசா பிரியா வயது 22 என்ற யுவதியே... Read more »

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான இளைஞன் விபரீத முடிவால் உயிரிழப்பு!

ஹெரொயின் போதைப் பொருளுடன் கைதான ஒரு இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து போத்தல் ஒன்றை உடைத்து அதன் மூலம் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய எடுத்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. போதைப் பொருளுடன் கைது... Read more »

யாழ் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கைது!

யாழ்ப்பாணம் மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்புகளில் கடந்த ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான நடவடிக்கைகளின் விளைவாக சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் போது, ​​இந்த சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட... Read more »

யாழ் பிரபல சைவ உணவகத்தில் புழுக்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம் – ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் புழுக்கள் காணப்படும் காணொளியை ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள ஒரு... Read more »

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நேற்றிரவு வெடித்த குண்டால் பரபரப்பு!

வாகனம் பழுது பார்க்கும் நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடித்த வெடிகுண்டு இந்த வெடிகுண்டு வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில்... Read more »

யாழ் உரும்பிராய் அக்குபஞ்சர் வைத்தியர் தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி

சமூகத்தில் போலி வைத்தியமும் பல ஏமாற்று கதைகளை கூறி ஒருவரை தமது பிழையான சேவைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் காணப்பட்டு வருகின்றது. ‘விரைவில் நோய் குணமாகும் சாத்தியம்’ என பிழையான தகவல்கள் சமூகத்தில் நிலவும் போது பலர் அதன்பால் நாடிச் செல்வதாக யாழ் போதனா... Read more »

யாழில் இருந்து விடுமுறைக்கு சென்ற கான்ஸ்டபிள் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் குற்றத்தடுப்பு நடவடிக்கை மாளிகாவத்தை பொலிஸார் நேற்று (17) இரவு... Read more »