கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (24) காலை காலி கலேகன பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் கொள்கலனிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. கொள்கலன் வாகனம் காலி... Read more »
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. நெடுந்தீவு பயணித்த... Read more »
சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (24.08.2023) ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் (30.08.2023) ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையொட்டி... Read more »
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தற்போது காணப்படும் அரிசி கையிருப்பு எதிர்வரும் பெரும் போகத்தின் அறுவடை கிடைக்கும் வரை போதுமாகவுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் கல்வியாளர் சந்திப்பு... Read more »
இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த மூன்று இலங்கைப் பிரஜைகளை பெங்களூர் பொலிஸின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) கைது செய்துள்ளது. கைதான இலங்கையர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அடிப்படையில் மூன்று இலங்கையர்களையும் பெங்களூரின் புறநகர் பகுதி ஒன்றிலுள்ள... Read more »
யாழில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி கொற்றாவத்தையில் இன்று (24) மதியம் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14 வயதான சிறுவன் எரிந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில்... Read more »
சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதற்கான வாழ்த்துக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பிற்கும் (இஸ்ரோ) இந்திய மக்களுக்கும் ஜனாதிபதி... Read more »
போலியான கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் விமான நிலையத்தி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில்... Read more »
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட அதிகமானோர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக... Read more »
வியாழக்கிழமை இன்று (ஆகஸ்ட் 24) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 317.4823 ஆகவும் விற்பனை விலை ரூபா 329.8198 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, Read more »

