இந்தியாவில் கேரளா உட்பட பல பகுதிகளில் பரவி வரும் கொடிய நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். பன்றிகள் மூலம் இந்நோய் பரவக்கூடிய சாத்தியம்... Read more »
இலங்கை கடற்படை இலங்கை கப்பல் நிறுவனத்துடன் இணைந்து நேற்று (23.09.2023) காலி முகத்திடல் கடற்கரையில் மரம் நடுகை செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளது.’ உத்தேசமாக ஐம்பது (50) பேரரிங்டோனியா ஆசியாட்டிகா (முடிலா) மரக்கன்றுகள் காலி முகத்திடல் கடற்கரையின் மையப் பகுதியிலிருந்து ஆரம்பித்து கடலோர சுற்றுச்சூழலை வளப்படுத்தி, அதன்... Read more »
மலேசியாவின் செந்தூல் கீழ்க்கோவில் கிராமம் பகுதியில் பெர்ஹெண்டியன் தெருவில் இலங்கையர்கள் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் அறிவித்துள்ளனர்.... Read more »
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணை தள்ளிவிட்டு தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அன்புவழிபுரம் பகுதியில் நேற்றைய தினம் (22-09-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கர்ப்பிணிப் பெண் நேற்று மதியநேர... Read more »
யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நடிகர் தினேஷ் நடித்த அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகமானவர். இவரது முதல் படத்திலேயே இவருடைய பாடல்கள்... Read more »
சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சம்பவத்தில் கொலன்னாவ மற்றும் களனி, வனவாசல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். போதைப்பொருட்களை... Read more »
முல்லைத்தீவு அரச திணைக்களமொன்றின் வாகனத்தில் நேற்று (22) மாலை 6:20 மணியளவில் மல்லாவி பகுதியில் அமைந்திருக்கின்ற மதுபான சாலையில் வாகனத்தை நிறுத்தி மதுபானங்கள் வாங்கிச் சென்றதாக கூறப்படுகின்றது. ஒரு அரச திணைக்களத்திற்குரிய வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கண்டுகொள்ளாத... Read more »
இலங்கையின் எதிர்காலம், சமாதானம் மற்றும் ஒற்றுமைக்காக அமெரிக்கா என்றும் இணைந்து பணியாற்றும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு மஹரகம இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்... Read more »
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்வாக மற்றும் செயற்பாட்டு விவகாரங்களை இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக, இந்த பல்கலைக்கழகம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.... Read more »
மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீட்டரில் மோசடி செய்த வீட்டு உரிமையாளர்கள் இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீட்டரில் சட்டவிரோதமாக மோசடி செய்து மின்சாரத்தை பெற்றுவந்துள்ளமை மின்சார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.... Read more »

